தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

276

தனுஷ்கோடி, அரிச்சல்முனை, முகுந்தராயர் சத்திரம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் வழக்கத்தைவிட காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது.

இதையடுத்து தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் துறைமுகத்தில் உள்ள ஜட்டி பாலத்தில் கடல் அலைகள் மோதி 30 அடிக்கு மேல் அலைகள் ஆக்ரோஷத்துடன் எழுந்து காணப்படுகிறது.

மேலும் ஆக்ரோஷத்துடன் எழும் கடல் அலைகளை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

இந்நிலையில் அலைக்கு அருகே சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.