அனைத்து காவல்நிலையங்களுக்கும் DGP சைலேந்திரபாபு உத்தரவு

390

தமிழகத்தில் அண்மைக் காலமாக வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்க வேண்டும் என அனைத்து காவல்நிலையங்களுக்கும் DGP சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உணவகங்கள், தொழில்நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.

வடமாநிலத்தவர்களை பணியில் அமர்த்துபவர்கள் அவர்களின் ஆவணங்களை காவல்நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வடமாநிலத்தவர் அதிகம் பேர் பணிபுரியும் தொழில்நிறுவனங்களின் பட்டியலையும் சேகரிக்க வேண்டும் எனவும் DGP சைலேந்திரபாபு ஆணையிட்டுள்ளார்.