பிரபல உணவக சிக்கனில்  வெந்தநிலையில் பல்லி -அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் 

33
Advertisement

ஒரு பிரபலமான உணவகம் செல்லும்போது,உணவின் சுவை ஒருபுறம் இருந்தாலும் உணவை சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படவேண்டும் என்று தான் அனைவரும் எதிர்பார்ப்பார்கள்.

இந்நிலையில், டெல்லியின் மிகவும் பிரபலமான இத்தாலிய உணவகங்களில் ஒன்று டிஜின் கஃபே.நச்சத்திர அந்தஸ்தை கொண்ட இந்த உணவகத்திற்கு வரிசையில் காத்திருந்து தான் சாப்பிட வேண்டும்.இதுபோன்ற தருணத்தில் இங்கு சாப்பிட சென்ற நண்பர்கள் குழு,உணவுகளை ஆர்டர் செய்துள்ளனர்.

அவர்கள் வாங்கியதில் சிக்கன் சாலடும் ஒன்று,பாதி சாலட்டை சாப்பிட்ட பின் தான் அதிர்ச்சி காத்திருந்தது.பாதி சாப்பிட அந்த சிக்கின் சாலட்டில்,வெந்த நிலையில்  பல்லி ஒன்று உள்ளது.இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள்,  பல்லி பற்றி கூறியபோது ஊழியர்கள் மன்னிப்பு கேட்டதாகவும் ஆனால் அவ்வளவுதான் என்றும் குறிப்பிட்டுள்ளார் இதை பகிர்ந்த அவர்களில் ஒருவர்.

Advertisement

அதைத்தவிர உணவு மாற்றப்பட்டதா அல்லது அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டதா என்பதை அவர் குறிப்பிடவில்லை. இணையத்தில் பகிர்ந்த அவரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.