தலைநகர் டெல்லியை தண்ணீர் குளமாக்கிய தொடர் மழையால் தார் சாலைகள் தண்ணீர் சாலையாக மாறியுள்ளது. கடந்த சில நாட்களாக தலைநகர் டெல்லியில் தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் டெல்லியின் முக்கிய சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது.
குறிப்பாக மாதுரா சாலையில் அதிகளவில் மழைநீர் தேங்கி உள்ளதால், அவ்வழியே செல்ல வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வரும் நிலையில், முக்கிய சாலைகளில் பல மணி நேரங்களாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் தலைநகர் டெல்லியில் உள்ள தார் சாலைகள், தற்போது தண்ணீர் சாலைகளாக காட்சியளிக்கிறது.