வகுப்பறையில் நடனமாடிய ஆசிரியை

37
Advertisement

டெல்லி அரசு  பள்ளி ஆசிரியை ஒருவர் தனது  மாணவிகளுடன் வகுப்பறையில் நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மனு குலாட்டி என்ற ஆசிரியை டெல்லி அரசு பள்ளியில் பணியாற்றுகிறார்.பள்ளி குழந்தைகளுடன் ஒரு தோழி போல பழகுவது,அதே நேரம் படிப்பிலும் குழந்தைகள் கவனம் செலுத்தும் விதம் கற்றுக்கொடுப்பது இவரின் வழக்கம்.

இவர் வகுப்பில் மாணவிகளுடன் நடனம் ஆடுவது இது முதல் முறை அல்ல என்றாலும் சமீபத்தில் அவர் பகிர்ந்த  இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் மனு குலாட்டி பள்ளி  மாணவிகளுடன்  வகுப்பறையில் உற்சாகமாக நடனம் ஆடி,மாணவிகளையும் உற்சாகப்படுத்துகிறார்.

Advertisement

மேலும் ” கோடைக்கால முகாமின் கடைசி நாளில் எங்கள் நடனம்” என்று வீடியோவின் தலையில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார் அவர்.