கோபத்தில் விபத்தை ஏற்படுத்திய நபர்

321

டெல்லியில் இருசக்கர வாகன ஓட்டிக்கும், கார் ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் வாகனத்தை இயக்கியபடி வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த கார் ஓட்டுநர், இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை அதிவேகமாக மோதிவிட்டு, நிற்காமல் சென்றுள்ளார்.

இந்த காட்சிகள் வெளியாகி வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், இருசக்கர வாகனம் மீது மோதி விட்டு, நிற்காமல் சென்ற கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.