9 ஆவது இடத்தை பிடித்த இந்திய வீராங்கனை

deepika kumari
Advertisement

டோக்கியோ ஒலிம்பிக்கில் வில்வித்தை தனிநபருக்கான தரவரிசை சுற்றில் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 9 ஆவது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நாளான இன்று நடைபெறும் தகுதிநிலை தரவரிசை சுற்றில் இந்திய வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

வில்வித்தைப் போட்டிக்கான தகுதிநிலை சுற்றில், தனிநபருக்கான மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி பங்கேற்றார். இதில் முதல் மூன்று இடத்தை கொரிய வீராங்கனைகள் பிடித்தனர்.

இதில் இந்தியாவின் தீபிகா குமாரி 663 புள்ளிகளுடன் 9-ஆவது இடத்தை பிடித்தார். முதல் இடத்தை பிடித்த தென் கொரியாவின் அன் சான் 680 புள்ளிகளை பெற்றார்.

கடந்த ரியோ ஒலிம்பிக்கில் தனிநபர் தகுதிப்பிரிவில் 20-ஆவது இடத்தை பிடித்த தீபிகா குமாரி, இம்முறை சிறப்பாக செயல்பட்டு பட்டியலில் 9 ஆவது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Advertisement

டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்தியா சார்பில் 25 பேர் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 19 வீரர்கள், 6 அதிகாரிகள் என 25 பேர் இந்தியாவின் பிரதிநிதிகளாக கலந்து கொள்கிறார்கள். கொரோனா காரணமாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதால் குறைந்த அளவிலான வீரர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.