ஈரானில் ஹிபாஜ் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

263

ஈரானில் ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.

ஈரானில் உள்ள குர்திஸ்தான் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை, ஹிஜாப் முறையாக அணியவில்லை என போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதனை கண்டித்து, ஈரான் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த நிலையில் தலைநகர் தெக்ரான் மற்றும், குர்திஸ்தானில் மக்கள் அதிகளவில் கூடி போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும், கண்டன கோஷங்களை எழுப்பி, தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த நிலையில், ஈரான் முழுவதும் ஆங்காங்கே நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தன.

இந்த வன்முறைகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 50 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் பாதுகாப்பு பணியில் உள்ளவர்களும் அடங்குவார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் தீவிரமடைந்துள்ள போராட்டம், பல நாடுகளுக்கும் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.