படம் பார்த்து பொதுத்தேர்வில் பாஸ் செய்த 12 பேர்

303
Advertisement

நாடு முழுவதும் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஓரிரு நாட்கள் இடைவெளியில் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், உத்திரப் பிரதேச மாநிலத்தில் 12 பேர் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கு ஒரு படம் காரணம் என்றால் நம்ப முடிகிறதா?

அண்மையில், அபிஷேக் பச்சனின் நடிப்பில் வெளியான தாஸ்வி என்ற திரைப்படத்தில், அபிஷேக் நாற்பது வயதில் பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெறும் அரசியல்வாதியாக நடித்து இருப்பார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஆக்ரா மத்திய சிறையில் நடைபெற்றது. மேலும், அங்கிருக்கும் கைதிகளுக்கு, தாஸ்வி படமும் திரையிடப்பட்டது.

இதையடுத்து, அங்கிருந்த கைதிகளில் சிலர் படத்தின் கருத்தை உள்வாங்கி கொண்டு, உத்வேகம் பெற்று,  சிறப்பாக படித்து, பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த செய்தியை கேள்விப்பட்ட அபிஷேக் பச்சன், தன் படத்தின் மூலம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தனக்கு கிடைக்க கூடிய எந்த விருதை காட்டிலும் இதுவே தனக்கு திருப்தியான உணர்வை தருவதாகவும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.