மெட்வதேவ் அதிர்ச்சி தோல்வி

268

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதி போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா – மிடில்கூப் ஜோடி, கிளாஸ்பூல் – ஹெலியோவாரா ஜோடியை எதிர்கொண்டது.

இதில் முதல் செட்டை இழந்த போபண்ணா ஜோடி, அடுத்த இரண்டு செட்களையும் கைப்பற்றி வெற்றி பெற்றது.

இதன் மூலம், இந்தியாவின் ரோகன் போபண்ணா, மிடில்கூப் ஜோடி 4-6, 6-4, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இதனிடையே ஆடவர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்று போட்டியில் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள ரஷ்யாவின் டேனில் மெட்வதேவும், தரவரிசையில் 20வது இடத்தில் உள்ள மரின் சிலிக்கும் மோதினர்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மரின் 6 -2, 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.

4வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்த மெட்வதேவும் தொடரில் இருந்து வெளியேறினார்.