அடடே! Tooth Pasteஎ இதுக்குலாம் கூட பயன்படுத்தலாமா? நச்சுன்னு 6 டிப்ஸ் …

162
Advertisement

காலையில் எழுந்தவுடன் பல் துலக்க பயன்படுவது tooth paste என அழைக்கப்படும் பற்பசை.

பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் பற்பசை வேறு எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

பற்பசையை சிறிதளவு தண்ணீரில் கலந்து அந்த கலவையை தங்க நகைகளின் மீது மென்மையான brush வைத்து தேய்த்து, தண்ணீரில் கழுவி காய வைத்தால், நகைகள் பளபளப்பாக காட்சியளிக்கும். ஊருக்கு பயணம் சென்று வந்த பின் அழுக்கான டிராலி bagஐ சிறிதளவு பேக்கிங் சோடாவுடன் பற்பசை சேர்த்த கலவையால் புதிது போல மாற்ற முடியும். தேவைப்படும் இடங்களில் பேக்கிங் சோடா கலவையை தேய்த்து, பிறகு ஈரமான துணி வைத்து துடைக்கலாம். பைக் சுத்தம் செய்யவும் இந்த டெக்னிக்கை பயன்படுத்தலாம்.

டைல்ஸ் கறைகளின் மீது வெதுவெதுப்பான நீரில் கலந்த பற்பசை கலவையை வைத்து சுத்தம் செய்து கழுவினால் பளிச்சென்ற டைல்சை பெறலாம். சுவர்களில் உள்ள சிறு ஆணி துளைகளை அடைக்க சிறிதளவு பேஸ்ட் தடவி உலர விட்டால், துளைகளை மறைத்து விடலாம்.

ஸ்டீல் tapகளை சுத்தம் செய்ய வினிகர், எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு பற்பசை சேர்த்த கலவையை வைத்து சுத்தம் செய்தால், புதிது போல மாறுவதை பார்க்க முடியும். இதே போல பழைய கண்ணாடிகளை சுத்தம் செய்யவும் பற்பசையை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.