தினசரி கொரோனா பாதிப்பு குறைவு

268

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து, 2 ஆயிரத்து 500க்கும் கீழ் பதிவாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

இந்தியாவில் நேற்று 2 ஆயிரத்து 678 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று குறைந்துள்ளது. அதன்படி நாடுமுழுவதும் புதிதாக 2 ஆயிரத்து 430 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிகை 4 கோடியே 46 லட்சத்து 26 ஆயிரத்து 427 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 378 பேர் குணமடைந்ததால், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து 70 ஆயிரத்து 935 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு புதிதாக 17 பேர்  உயிரிழந்ததால், பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 874 ஆக அதிகரித்துள்ளது.  நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பிற்கு 26 ஆயிரத்து 618 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.