மகிழ்ச்சில் தன் மனைவி மீது சைக்கிளை  ஏற்றிய வீரர்

137
Advertisement

கொலம்பியாவில் ஆண்டுதோறும் சைக்கிள் பந்தயம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நடப்பாண்டிற்கான போட்டி சமீபத்தில் நடைபெற்றது.

பந்தயத்தில் லூயிஸ் கார்லோஸ் சியா வெற்றி பெற்றார், அவர் பந்தைய இலக்கை அடைவதை புகைப்படம் எடுக்க அவரின் மனைவி இலக்கின் குறுக்கே நின்றுகொண்டு இருந்தார்.

உடன் போட்டியிட மற்ற வீரர்களை பின்னுக்கு தள்ளி முன்னேறி வெற்றி கோட்டை  அடைந்தார் லூயிஸ்.வெற்றிபெற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தியபடி சைக்கிளில் அமர்ந்த வந்த அவர், எதிரே நின்ற தன் மனைவியை கவனிக்கவில்லை.

Advertisement

வந்த வேகத்தில்,நேராக மனைவி  மீது மோதினார்.இதில் நிலைகுலைந்து கீழே விழுந்தார் அவரின் மனைவி. கண்ணிமைக்கும் நொடியில் நடத்த இந்த விபத்தை,பின்பு தான் உணர்ந்தார்  லூயிஸ். கேமராவில் பதிவான இந்த விபத்தின் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.