மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

355

கடலூர் அரசு மருத்துவமனையில் வெடிகுண்டு இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு எண்ணுக்கு மிரட்டல் வந்ததது.

இதனையடுத்து கடலூர் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கடலூர் மாவட்ட வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

ஆனால் வெடிகுண்டு எதுவும் இல்லாததால் அவர்கள் திரும்பி சென்றனர்.

இதுகுறித்து புதுநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.