தனியார் பஸ் உரிமையாளர் வீட்டில் கொள்ளை

35

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன்.

தனியார் பேருந்து உரிமையாளரான இவர் குடும்பத்துடன் குருவாயூருக்கு சென்று வீடு திரும்பியுள்ளார்.

அப்போது வீட்டின் முன்புற கதவு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அரை கிலோ தங்கம், 15 கிலோ வெள்ளி, இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் மற்றும் இரண்டு லட்ச ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

Advertisement

இதுகுறித்து விருத்தாசலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.