CSK க்கு செய்த சதி உண்மையை அறிந்த ரசிகர்கள் கொந்தளிப்பு

384
Advertisement

சென்னை – மும்பை அணிகள் இடையேயான ஐ.பி.எல் போட்டியின்போது, சிறிது நேரம் DRS முறை பயன்படுத்தப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை – மும்பை அணிகள் இடையேயான ஐ.பி.எல் போட்டியில் நேற்றிரவு நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணி படுதோல்வி அடைந்த நிலையில், போட்டியின் போது, சிறிது நேரம் டி.ஆர்.எஸ் முறை பயன்படுத்தப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று போட்டிகளில் சிறப்பாக ஆடிய தொடக்க வீரர் கான்வே இந்த முறை, முதல் ஓவரிலேயே LPW முறையில் நடுவர் அவுட் கொடுத்தார்.

இதையடுத்து கான்வே Review கேட்க முற்பட்டார். ஆனால், மைதானத்தில் மின்வெட்டு காரணமாக DRS தொழில்நுட்பம் தற்காலிகமாக செயல்படாது என நடுவர்கள் தெரிவித்ததால், கான்வே களத்திலிருந்து வெளியேறினார். கான்வே விக்கெட் பந்து ஸ்டம்புகளை தகர்க்கவில்லை என்பது தெரிவதால், DRS விவகாரம் சர்ச்சையாகி உள்ளது. இருப்பினும் அடுத்த சிறிது நேரத்தில் இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டது.