பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை முட்புதரில் வீசிய கொடூரம்

baby
Advertisement

திருப்பூரில், முட்புதரில் வீசப்பட்டிருந்த பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.

திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள புதர் பகுதியில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை வீசப்பட்டிருந்தது.

குழந்தை அழும் சப்தம் கேட்டு அப்பகுதியினர் சென்று பார்த்த போது பிறந்த குழந்தை புதர் பகுதியில் வீசப்பட்டது தெரியவந்தது.

உடனடியாக. புதரில் இருந்து குழந்தையை மீட்ட அப்பகுதி மக்கள், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், வேறு ஏதாவது பகுதியில் பிறந்த குழந்தையை எடுத்து வந்து இப்பகுதியில் வீசி சென்றனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.