மிளகாய் பொடி தூவப்பட்ட நிலையில் மூதாட்டி உடல் கண்டெடுப்பு

198
dead-body
Advertisement

சென்னை காசிமேட்டில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து, நகையை கொள்ளையடித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை காசிமேட்டை சேர்ந்த மைக்கேல் என்பவர் ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக கடலுக்கு சென்றுள்ளார். இதனால் அவரது மனைவி மேரி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் மைக்கேலின் மகள் நேற்று வீட்டிற்கு சென்ற போது, தாய் மேரி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேரி அணிந்திருந்த நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு, அவரது உடல் முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டுள்ளது.

Advertisement

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், மேரியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.