நாகை மாவட்டம் மேலவாஞ்சூரைச் சேர்ந்த கார்த்தி – அபர்ணா தம்பதிக்கு, 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதனிடையே அபர்ணாவுக்கும், ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ் என்பவருக்கும் இடையே உறவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், இவர்களது உல்லாசத்திற்கு குழந்தை இடையூறாக இருந்ததால், அபர்ணா பெற்ற குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். மேலும் குழந்தையை கொலை செய்ததை மறைத்து உடலை அடக்கம் செய்ய முயன்றுள்ளார்.
இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விசாரணை மேற்கொண்ட போலீசார், அபர்ணா மற்றும் சுரேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.