நகைகளை கொள்ளையடித்துச் சென்று தாய் மகள் அடித்துக் கொலை

235

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிசந்தை அருகே முட்டம் மீனவ கிராமத்தினை சேர்ந்தவர் அன்றோ சகாயராஜ், பவுலின் மேரி தம்பதி.

சகாயராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், பவுலின் மேரி அவரது தாயுடன் முட்டம் பகுதியில் வசித்து வந்தார்.

இந்நிலையில் பவுலின் மேரியை பார்க்க, அவரது வீட்டிற்கு வந்த உறவினர்கள் பவுலின் மேரி மற்றும் அவரது தாய் இருவரும் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

Advertisement

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், இருவரும் கம்பால் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

மேலும் கழுத்தில் அணிந்திருந்த செயின் மற்றும் வீட்டில் இருந்த நகைகளும் மாயமாகி இருந்தது. நகைக்காக நடந்த கொலையா? அல்லது வேறேதும் காரணம் உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.