கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர், தனது நண்பர் முருகேசனின் தங்கையை காதல் திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், திருமணமாகி 10 மாதங்கள் கழித்து, முருகேசனின் தங்கை சொத்தில் பங்கு கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த முருகேசன், குமார் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவன் வின்சென்ட் குமார் ஆகியோருடன் சேர்ந்து சந்தோஷை பயங்கர ஆயுதங்களால் குத்தி கொலை செய்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சூளகிரி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கொலையில் ஈடுப்பட்ட முருகேசன், குமார் மற்றும் வின்சென்ட் குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.