திருமண வீட்டில் திடீர் விசிட் கொடுத்த திருடன்

cime theft
Advertisement

புதுச்சேரி லாஸ்பேட்டை நேரு நகரைச் சேர்ந்தவர் பிரேமா.
தொடக்கப்பள்ளி ஆசிரியையான பிரேமாவுக்கு இன்னும் மூன்று நாட்களில் திருமணம் நடைபெற இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மர்ம நபர்கள் இரண்டு பேர் நள்ளிரவில் பிரேமாவின் வீட்டிற்குள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி, வீட்டில் இருந்த 35 சவரன் தங்க நகைகள், கால் கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 18 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய லாஸ்பேட்டை போலீசார், சந்தேகத்தின்பேரில் அய்யனார், அபினேஷ் ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

ஆசிரியை பிரேமாவின் வீட்டில் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்தை இருவரும் ஒப்புக்கொண்டனர்.

Advertisement

அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மற்றும் பணத்தை மீட்டனர்.