சிட்னி மைதானத்தின் நுழைவு வாயிலுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சச்சின் டெண்டுல்கரின் பெயர் சூட்டியுள்ளது.

29
Advertisement

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களான இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர், வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா ஆகியோர் திகழ்ந்து வருகின்றனர்.

அவர்களின் சாதனைகளை கவுரவப்படுத்தும் வகையில் ஆஸ்திரேலியாவில் உள்ள புகழ்பெற்ற சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் ஒரு நுழைவு வாயிலுக்கு அவர்களது பெயரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சூட்டியது. இந்த அங்கீகாரம் குறித்து கருத்து தெரிவித்த டெண்டுல்கர், சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் வெளிநாட்டு அணி வீரர்கள் செல்லும் நுழைவு வாயிலுக்கு தனது பெயரையும், தனது நண்பர் லாராவின் பெயரையும் சூட்டி இருப்பதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன் என நெகிழ்ச்சியுடன் கூறினார்.