ஜேசிபி மூலம் கொல்லப்பட்ட மாடு – பதைபதைக்கும் வீடியோ !

371
Advertisement

ஜேசிபி இயந்திரம் மூலம் காளை மாட்டை அடித்துக் கொல்லும் வீடியோ ஒன்று  இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் , ஜேசிபி இயந்திரத்தின் முன்புற மண்வெட்டியால் காளை ஒன்று கொடூரமாக அடித்து நொறுக்குவது பதிவாகியுள்ளது . பின்னணியில் புல்டோசர் பாபா என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருக்க  உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கிண்டல் செய்யும் போது, உத்திரபிரதேசத்தில் புல்டோசரால் மாடு நசுக்கப்பட்ட வீடியோ வைரலானது என்று கூறப்படுகிறது. ட்விட்டர் பயனர் ஒருவர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்,

ஆனால் , இந்த வீடியோவில் சொல்வது உண்மை அல்ல அதேநேரம் பசு கொள்ளப்பட்டது உம்மை தான் என புது விளக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

லாஜிக்கல் இந்தியன் ஃபேக்ட் செக் குழு இந்த வீடியோவின் உண்மை தன்மையை சரிபார்த்து இந்த விளக்கத்தை கொடுத்துள்ளது.அதில் இந்த வைரலான வீடியோ மஹாராஷ்டிராவில் எடுக்கப்பட்டது. 

தொழில்நுட்ப நுணுக்கங்களை பயன்படுத்தி இந்த வீடியோவில் உள்ள படங்களை  கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலை நடத்தினோம்.இதன் மூலம் இந்த வீடியோ இரண்டு வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டது என தெரியவந்தது.

தகவலின்படி , மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நாய் கடித்ததால் மாடு ஒன்று  வெறிபிடித்து அப்பகுதி மக்களை தாக்கியதாக  தெரிவிக்கின்றனர்.

அந்த மாடை பிடித்து காட்டில் விடுவிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் மீண்டும் அந்த மாடு மக்கள் உள்ள பகுதிக்கு வந்து  மக்களை அச்சுறுத்துவதாக தெரிவிக்கின்றனர்  கிராம மக்கள் .

இதன் காரணமாக அந்த மாட்டை  ஜேசிபி மூலம்  கொன்று வயல்வெளியில் புதைத்தனர் என தெரிவித்துள்ளது .