கைவிடப்பட்ட நாய்குட்டிகளுக்கு தாயான பசு-நெகிழ்ச்சி சம்பவம்

114
Advertisement

 “தாய் அன்பிற்கு இவ்வுலகில் எதுவும் ஈடு இல்லை” என்பதை உணர்த்தும் பல நெகிழ்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது .இந்நிலையில்,  இந்திய வன சேவை (IFS) அதிகாரி சுசாந்தா நந்தா தனது  ட்விட்டரில் பகிர்ந்த வீடியோ  அனைவரையும் நெகிழ்ச்சில் ஆய்தியுள்ளது.

வைரலாகி வரும் இந்த வீடியோவில், பசு ஒன்று குட்டி நாய்களுக்கு பால் கொடுக்கிறது.அந்த நாய் குட்டிகள் தன் அம்மாவிடம் பால்குடிப்பதாக உணர்ந்து பசுவிடம் பால் குடிப்பது,எந்த உயிரினமாக இருந்தாலும் சரி ஒரு தாயின் அன்பு மற்றும் அரவணைப்பையே வெளிப்படுகிறது.இந்த வீடியோ உடன்  “இது இந்தியாவில் மட்டுமே நடக்கும். கைவிடப்பட்ட குட்டிகளுக்கு  பசு தாயாகியது” என பகிரப்பட்டுள்ளது.