உருமாறும் கொரோனா – 3வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் வாய்ப்பு இருக்கு

228
vaccine
Advertisement

உருமாறும் கொரோனாவால், பொதுமக்களுக்கு 3-வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான வாய்ப்பு உள்ளதாக டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

கொரோனா 2-வது அலையைத் தொடர்ந்து, புதிதாக உருமாறும் கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இதனால் பிரிட்டன் போன்ற நாடுகள் பொதுமக்களுக்கு 3-வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.

இதுகுறித்து பேசிய டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா, பொதுமக்கள் மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது, அதனை பூஸ்டர் மூலம் ஈடு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

Advertisement

நாட்டிலுள்ள அனைவருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.