பாலியல் தொல்லை – தீக்குளித்த பெண்

211

கோவையில் உள்ள கட்டுமான பொருட்கள் விற்பனை கடையில் வேலை செய்து வந்த இளம்பெண்ணுக்கு, கடையின் உரிமையாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பெண் குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக இளம்பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கடையின் உரிமையாளர் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட் பெண், அங்கு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதில் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து தற்கொலை வழக்கை, கொலை வழக்காக மாற்றிய போலீசார், கடையின் உரிமையாளர் நவநீதன் மற்றும் அவரது மனைவியை தேடி வருகின்றனர்.