ஆவின் நிறுவனத்தில் கணக்கில் வராத 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பறிமுதல்

331

கோவை மாவட்டம் பேரூர் பச்சாபாளையம் பகுதியில் உள்ள ஆவின் நிறுவனத்தில் பணி நிரந்தரம் செய்யவும், ஊழியர்களுக்கான பணப்பலன்களை வழங்கவும், உயர் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக புகார்கள் எழுந்தது.

இதன் அடிப்படையில், பேரூர் ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று மாலை அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது, கோவை ஆவின் நிறுவனத்தின் முதன்மை உதவியாளர் கிருஷ்ணமூர்த்தியின் காரில் இருந்து 5 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயும், அவரது அறையில் இருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக கிருஸ்ணமூர்த்தி மற்றும் அவருக்கு பணம் கொடுத்தவர்களிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.