கோவை பீளமேடு சவுரிபாளையத்தை சேர்ந்தவர் மனோஜ்.
இவர் தனது இரு சக்கர வாகனத்தில் ஆர்த்தி என்பவருடன் பேரூர் சாலையில் சென்றுள்ளார்.
அப்போது செல்வபுரம் தில்லைநகர் அருகே செல்லும் போது முன்னாள் சென்ற அரசு பேருந்தை இடது புறமாக முந்திச் செல்ல முயன்றதாக தெரிகிறது.
அப்போது நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் அரசு பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி மனோஜ் மற்றும் ஆர்த்தி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செல்வபுரம் போலீஸார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.