இந்தியாவில் மீண்டும் முதலில் இருந்து – தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்தது !

764
Advertisement

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் மீண்டும் மெல்ல மெல்ல உயரத் தொடங்கியுள்ளது. மற்ற நாடுகளை பொறுத்தவரை ஏற்கனவே அதிவேகத்தில் மீண்டும் பரவத்தொடங்கி உள்ளது கொரோனா தோற்று.

கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் , சுகாதார முன்னெச்சரிக்கை காரணமாக கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் உலகளவில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில்  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  2,527 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,54,952ஆக உயர்ந்தது.

மேலும் புதிதாக 33 பேர் உயிரிழந்துள்ளனர் இதையடுத்து  மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,22,149-ஆக உயர்ந்தது. தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,656 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,25,17,724-ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 15,079 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் 1,87,46,72,536 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 19,13,296 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அணைத்து மாநிலத்திலும்  சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தோற்று வேகமாக பரவ வாய்ப்பு உள்ள மாநிலங்களை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இந்நிலையில், தமிழகம் உள்பட பல மாநிலங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் அரசின் உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.