தமிழ்நாட்டில் பெருந்தொற்று பாதிப்பு எப்படி உள்ளது.?

188
coronavirus
Advertisement

தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் ஆயிரத்து 756 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1 லட்சத்து 55 ஆயிரத்து 199 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், ஆயிரத்து 756 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 179 பேருக்கும், சென்னையில் 164 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சிகிச்சையில் இருந்த 2 ஆயிரத்து 394 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 29 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். எந்தவித இணை நோயும் இல்லாத 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

தருமபுரி, திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் புதிதாக ஏதும் உயிரிழப்பு இல்லையென மக்கள் நல்வாழ்வுத்துறை கூறியுள்ளது.

பெருந்தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 24 லட்சத்து 98 ஆயிரத்து 289 பேர் குணமடைந்துள்ள நிலையில், 21 ஆயிரத்து 521 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.