இந்தியாவில் எத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்?

285
corona
Advertisement

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது.

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில், 35 ஆயிரத்து 178 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 22 லட்சத்து 85 ஆயிரத்து 857 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

கொரோனா தாக்குதலுக்கு மேலும் 440 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 32 ஆயிரத்து 519 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 37ஆயிரத்து 162 பேர் குணமடைந்ததால், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 14 லட்சத்து 85 ஆயிரத்து 923 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் 3 லட்சத்து 67 ஆயிரத்து 415 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.