“நாளை முதல் 24 மணி நேரமும் தடுப்பூசி போடப்படும்”

vaccine
Advertisement

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நாளை முதல் 24 மணி நேரமும் தடுப்பூசி போடப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 2.36 கோடி மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் வழங்கம் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையத்தை தொடங்கி வைத்தார்.

இதன் பின்ன செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நாளை முதல் 24 மணி நேரமும் தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்தார்.

Advertisement