இந்தியாவில் 2வது கொரோனா அலையை கடப்பதற்குள்ளாகவே. மீண்டும் சென்னையில் கொரோனா பரவலின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஒரு வாரமாக தினசரி கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைபவர்களை விட நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் தான் அதிகமாகிறார்கள்.
கொரோனா 2வது அலையின் போது யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு தொற்று வேகம் எடுத்து இருந்தது.
கடந்த மே மாதம் ஊரடங்கின் போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட தற்போது பாதிப்பின் எண்ணிக்கை அதிகரிப்பதை நாம் கண்கூடாகவே பார்க்கமுடிகிறது.
கொரோனா 2வது அலையின் போது வயது வித்யாசம் இல்லாமல் பாதிப்பு இருந்தது. ஆனால், 3வது அலையில் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று பேசப்பட்டுவருகிறது.
அதற்கு ஏற்றார் போல் புதுச்சேரியிலும் ஏறக்குறைய 25 குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு இருந்தனர். ஆனால், எந்த குழந்தைகளும் அதிக பாதிப்பிற்கு உள்ளாகவில்லை என்று பின்பதாக உறுதிசெய்யப்பட்டது.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவோ அல்லது காய்ச்சல் ஏதேனும் ஏற்பட்டால் மக்கள் உடனே மருத்துவமனைக்கு செல்வது அவசியம். கொரோனா 3வது அலையின் அச்சத்தை தடுப்பதற்காக நாம் சமூகஇடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவதன் நடைமுறையை பின்பற்றவேண்டும்.