காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 10 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்….

130
Advertisement

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால், அவரது எம்.பி. பதவி பறிபோனது.

இதையடுத்து ராகுல் காந்தி தனது சிறப்பு பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார். இதைதொடர்ந்து, அமெரிக்கா செல்ல உள்ளதால் புதிய சாதாரண பாஸ்போர்ட் கோரி ராகுல் காந்தி விண்ணப்பித்தார். இதற்காக தடையில்லா சான்று கோரி, டெல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவை அடுத்து, ராகுல் காந்திக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்றிரவு அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ விமான நிலையம் சென்றடைந்தார்.

அமெரிக்காவில் 10 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி, ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். ஜூன் 4ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள மெடிசன் சதுக்கத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்களை சந்தித்து கலந்துரையாட உள்ளார். .