20-வது நாளாக இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கினர் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின்

111

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் 20-வது நாளாக நீடிக்கிறது. காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் இருந்து தொடங்கிய ராகுல்காந்தியின்  பயணம் தற்போது கேரளாவில் தொடர்கிறது.

இந்நிலையில், ராகுல்காந்தி தனது  இந்திய ஒற்றுமை பயணத்தின்  20-வது நாளான இன்று கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் இருந்து தொடங்கினார். அவருடன் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் நடைபயணமாக செல்கின்றனர்.