ஈழத்தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ், பா.ஜ.க ஒரே நிலைப்பாட்டை கொண்டுள்ளது – திருமாவளவன்

18

ஈழத்தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ், பா.ஜ.க இரண்டு கட்சிகளும், ஒரே நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். இரு கட்சிகளின் ஆட்சியிலும், தமிழக மீனவர்கள், ஈழத்தமிழர்கள் பிரச்சனைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக, பா.ஜ.க உடன் கூட்டணி சேராது என்று பொருள்படும் வகையில், எடப்பாடி பழனிச்சாமி பேசியிருப்பது சற்று ஆறுதல் அளிப்பதாக தெரிவித்துள்ளார். திராவிட கட்சிகள் ஒன்றிணைந்தால்தான் பாஜக என்ற மதவாத சக்தியை தமிழகத்தில் கால் ஊன்றாமல் தடுக்க முடியும் என்றும், திருமாவளவன் தெரிவித்துள்ளார்.