“இளைஞர்கள் பணிக்காக ஏங்குகின்றனர்”

288
  1. மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்தை ஒட்டி, மத்திய அரசின் தோல்விகளை பட்டியலிட்டு காங்கிரஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் 9 லட்சத்துக்கு அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் 2 லட்சம் காலியிடங்களும், 1.68 லட்சம் சுகாதார ஊழியர் பணியிடங்களும், 1.76 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களும் காலியாக உள்ளதாகவும் காங்கிரஸ் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைப்போல ராணுவத்தில் 2.55 லட்சம் பணியிடங்களும், மத்திய ஆயுதப்படைகளில் 91 ஆயிரத்து 929 பணியிடங்களும், மாநில காவல்துறையில் 5.31 லட்சம் பணியிடங்களும், பல்வேறு நீதிமன்றங்களில் 5 ஆயிரம் பணியிடங்களும் காலியாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ், மாநில அரசுகளின் பல்வேறு துறைகளில் 30 லட்சத்துக்கு மேற்பட்ட காலியிடங்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த பட்டியலை வெளியிட்ட கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, இளைஞர்கள் பணிக்காக ஏங்குவதாகவும், ஆனால் அரசுகள் காலியிடங்களை நிரப்பவில்லை எனவும் குற்றம் சாட்டினார். அதேநேரம் மத்தியில் மோடி அரசு பதவியேற்ற 8 ஆண்டுகளில் நாடு முழுவதும் மத மோதல்கள் அதிகரித்து இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.