புதிய திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டும் முதலமைச்சர்

130

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு, பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பல்துறை விளக்கக் கண்காட்சியை பார்வையிடுகிறார்.

பின்னர் நடைபெறும் அரசு விழாவில், 81 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற 140 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

அதன் பின்னர் 143 கோடி ரூபாய் மதிப்பில் ஆயிரத்து 397 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

இதைதொடர்ந்து 50 ஆயிரத்து 575 பயனாளிகளுக்கு 379 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்

முன்னதாக, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கோட்டைவேங்கைப்பட்டி கிராமத்தில் 100 வீடுகளை கொண்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

பின்னர் அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதோடு, ஏற்கனவே முடிக்கப்பட்ட திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.