முதல்வரிடம் பாராட்டு வாங்கிய சிறுவன் – ஏன் தெரியுமா..?

336
cm
Advertisement

திருவாரூர் மாவட்டம் பழவனக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிறுவன் எஸ்.எஸ்.மாதவ். 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு கணினியில் மிகுந்த ஆர்வம்.

கணினி மொழிகளான Java, Python, C, C++, Kotlin ஆகிய கணினி மொழிகளைப் படித்துள்ளார்.

ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் கையடக்க சிறிய சிபியு (Mini CPU) கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

Advertisement

இந்த கருவி அனைவரிடத்திலும் சென்றடைய ஏதுவாக Terabyte India CPU Manufacturing Company என்ற நிறுவனத்தினைத் தொடங்கி, இணையதளம் மூலமாக மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறார்.

சென்னை தலைமை செயலகத்திற்கு தன் பெற்றோடு வருகைதந்த சிறுவன் முதல்வரிடம் கையடக்க CPU-வை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

மேலும், கணினி தொடர்பான அவரது உயர்படிப்பிற்கும், ஆராய்ச்சிக்கும் தமிழக அரசு அனைத்துவிதமான உதவிகளையும் செய்யும் என்று முதல்வர் உறுதியளித்தார்.