கல்லூரி கனவு நிகழ்ச்சி – தொடங்கி வைத்த முதலமைச்சர்

374

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்வியில் வழிகாட்டும் ‘கல்லூரி கனவு‘ நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், “மாணவர்களான நீங்கள்தான் இந்த மாநிலத்தின் அறிவு சொத்து; நான் மாநிலத்தின் முதல்வராக இருக்கலாம்.

ஒவ்வொரு துறையிலும் நீங்கள் முதல்வராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்ட திட்டமே ‘நான் முதல்வன்’ திட்டம்”

“பொறியியல், மருத்துவம் ஆகிய இரண்டு படிப்புகளை மட்டும் கனவாக நினைத்து நின்று விட வேண்டாம்.

பல்வேறு துறைகள் உள்ளது. அதை தேர்ந்தெடுத்து படித்து நிபுணத்துவம் பெற வேண்டும்” – முதலமைச்சர் ஸ்டாலின்

தேசிய சராசரி அளவை விட தமிழ்நாட்டில் கல்வி அறிவு அதிகம் என ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.