முக்கிய ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர்

208

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சா்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜுலை 28-ந் தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

இதில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனா்.

இந்த நிலையில், சென்னையில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான முன் ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில், விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், விளையாட்டுத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்தினார். 

Advertisement

ஒலிம்பியாட் தொடருக்கான தொடக்க விழாவை எங்கு நடத்துவது, வெளிநாட்டு வீரர்களுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார்.

மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்க இதுவரை 187 நாடுகள் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.