ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செஞ்சு வெச்ச முதல்வர்

368

சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட,  திரு.வி.க. நகரில்  இன்று ஏழை ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருமணத்தை நடத்திவைத்து வாழ்த்து தெரிவித்தார்.

மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களையும், பரிசுப்பொருட்களையும் முதல்வர் வழங்கினார்.

பின்னர் வாழ்த்துரை வங்கிய முதல்வர், பெருந்தலைவர் காமராஜர் பெயரில் அமைந்துள்ள இந்த  திருமண மண்டபத்தை அமைப்பதற்கு வழக்கு தொடர்ந்து போராடினோம் என்று கூறினார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அதை தடுக்கமுயன்றதை சட்டரீதியாக முறியடித்தோம் என்றும் முதல்வர் நினைவூட்டினார்.

மணமக்கள் சமூகத்தில் நல்ல பெயர் எடுக்கும் வகையில் முன்மாதிரியாக வாழ வேண்டும் என்றும் முதலமைச்சர் வாழ்த்துரை வழங்கினார்.