மதத்தின் பெயரால் அரசியல் செய்பவர்கள் ஆன்மீகவாதிகள் இல்லை; ஆன்மீக “வியாதிகள்” – முதலமைச்சர்

268

திருவண்ணாமலையில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், 1 லட்சத்து 74 ஆயிரம்  பயனாளிகளுக்கு 693 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

340 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 246 திட்டப்பணிகளுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், கிரிவலப்பாதையில் 14 கிலோமீட்டர் தொலைவுக்கும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.

Advertisement

அரசு அலுவலகங்களில் கோப்புகள் தேங்காமல் அதிகாரிகள் விரைவாக பணியாற்ற வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

ஊழலை ஒழிக்கும் பணியில் அதிகாரிகள் முன்னின்று செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மதத்தின் பெயரால் அரசியல் செய்து பிரிவினையை ஏற்படுத்துபவர்கள், ஆன்மீக வாதிகள் இல்லை, ஆன்மீக “வியாதிகள்” என்றும் முதலமைச்சர் கண்டனம் தெரிவி்த்தார்.