“ஒருபோதும் பின்வாங்கமாட்டோம்” – முதலமைச்சர் திட்டவட்டம்

cm
Advertisement

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருந்து ஒருபோதும் பின்வாங்கமாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக சட்டபேரவையில் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியநிலையில், திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பட்ஜெட்டில் நிதிஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

இரண்டு ஏக்கர் இலவச நிலம் வழங்கப்பட்டதா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மோனோ ரயில் திட்டம், இலவச செல்போன் உள்ளிட்ட திட்டங்களை அதிமுக நிறைவேற்றியதா என்று பதில் அளித்தார்.

Advertisement

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருந்து ஒருபோதும் பின்வாங்கமாட்டோம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக பதில்அளித்தார்.