தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் வி. நடராஜன் காலமானார். அவருக்கு வயது 70.
முள்ளும் மலரும், தர்ம சீலன், பங்காளி, சின்ன கவுண்டர் உள்ளிட்ட படங்களை இவர் தயாரித்துள்ளார். நடராஜன் தயாரிப்பில்தான் இயக்குநர் மகேந்திரன் சினிமாவில் அறிமுகமானார்.
கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்த நடராஜன் நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். நடராஜனின் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.