அதுக்குள்ள நிகழ்ச்சியில் கலந்துக்க போறாரா விக்ரம்?

234
Advertisement

வெள்ளிக்கிழமையன்று விக்ரம், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், அன்று நடந்த பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சியில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை.

முன்னதாக, விக்ரமுக்கு மாரடைப்பு என வதந்திகள் பரவிய நிலையில், அவரின் மேலாளர், விக்ரம் லேசான நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் நடித்து ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளிவர உள்ள கோப்ரா திரைப்படத்தின் ஆடியோ லான்ச் விழா, திங்கள்கிழமை அன்று சென்னை Phoenix மாலில் நடக்க உள்ளது. இந்த அறிவிப்பை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட அஜய் ஞானமுத்து, விக்ரம் விழாவில் கலந்து கொள்வார் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

இந்த செய்தி பல ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், சிலர் முதலில் விக்ரம் அவரது உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.