பல படங்களை சாதி, மத, கலாச்சார காரணங்களுக்காக Boycott செய்ய வலியுறுத்துவது, பாலிவுட் வட்டாரங்களில் வாடிக்கையாகவே மாறிவிட்டது.
அண்மையில் வெளியான லால் சிங் சதா, ரக்ஷா பந்தன், டூபாரா, டார்லிங்ஸ் போன்ற படங்களும் Boycott பட்டியலில் இடம்பெற்றதால் திரையரங்குகளில் தாக்கு பிடிக்க வெகுவாக திணறின.
இந்நிலையில், கோப்ரா படத்தின் ரிலீஸை முன்னிட்டு விக்ரம் பல ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வருகிறார்.
ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விக்ரமிடம், Boycott கலாச்சாரம் பற்றி ஒருவர் கேள்வி எழுப்ப, தனக்கு boy என்றால் என்ன என்றும், girl என்றால் என்ன என்றும், ஏன் cot என்றால் கூட தெரியும், ஆனால் boycott என்றால் என்னவென தெரியாது என்று நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.
Boycott கலாச்சாரம் தொடர்பான கேள்விக்கு விக்ரம் கூறிய பதில் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.