சியான் 61 புது அப்டேட்

541
Advertisement

தனது அர்ப்பணிப்பான நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகரான சியான் விக்ரம், அண்மையில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் ஆன விக்ரம் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில், பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிக்க இருக்கும், சியான் 61இன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கி உள்ளது.

3D தொழில்நுட்ப தரத்தில், KGF நிலப்பரப்பை சுற்றி எடுக்கப்பட இருக்கும் இந்த படத்திற்கு மைதானம் என பெயர் வைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜீவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை, 2023ஆம் வருடம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.