“நான் வீட்டுக்கு வரமாட்டேன்..! ” பேச்சுவார்த்தை நடத்தி சிம்பன்சியை அழைத்துச்சென்ற பூங்கா ஊழியர்கள்

275
Advertisement

உக்ரைன் நாட்டின் கார்கிவ் உயிரியல் பூங்காவில் சில தினங்களுக்கு முன்  சிம்பன்சி ஒன்று தப்பிஓடிவிட்டது.சீச்சீ  (chichi ) என்ற அந்த சிம்பன்சி நகரில் உள்ள தெருக்களிலும் , திறந்தவெளி பூங்காக்களிலும் ஹாயாக சுற்றித்திரிந்துள்ளது.

தகவல் கிடைத்து சீச்சீ இருக்கும் இடத்திற்கு வந்த பூங்காவின் பராமரிப்பாளர்களில் ஒரு பெண் , அதன் அருகில் அமர்ந்து .. சமாதானம்  செய்து மீண்டும் அதன் வீட்டிற்கு அழைத்துச்செல்ல முயற்சிக்கிறார், அதாவது பூங்காவிற்கு .

இவர்களின் பேச்சுவார்த்தை வெகுநேரம் சென்றபோது, திடீரென மழை பெய்யத்தொடங்கியது.மழை துளிகள் தன் மீது  படுவதை விரும்பாத சீச்சீ ,ஓடிபோய் அந்த பெண்ணிடம் அவர் கையில் வைத்திருக்கும் ரெயின்கோட்டை போட்டுகொண்டது.இறுதியில், சீச்சியை ஒரு சைக்கிளில் அமரவைத்து அழைத்து சென்றனர் பூங்கா ஊழியர்கள்.